ஆஸ்திரேலியாவில் விமான விபத்து – இதோ வீடியோ..!

0
25

ஆஸ்திரேலிய தீவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கிருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. இந்த விமான விபத்தில் சுவிஸ் மற்றும் டேனிஷ் சுற்றுலா பயணிகள் உட்பட 3 பேர் பலியாகினர், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். செஸ்னா 208 கேரவனில் இருந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் ரோட்னெஸ்ட் தீவில் விபத்தின் பின்னர் காயமின்றி மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்வான் ரிவர் சீப்ளேன்ஸுக்குச் சொந்தமான விமானம், ரோட்னெஸ்ட் தீவிலிருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தலைநகரான பெர்த்தில் உள்ள அதன் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 65 வயது பெண், டென்மார்க்கை சேர்ந்த 60 வயது ஆண் மற்றும் பெர்த்தை சேர்ந்த 34 வயது ஆண் விமானி என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த மூவரும் பெர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான விமானம் கடலில் மிதக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here