இன்று (12) அதிகாலை 4.30 மணியளவில் மத்தளை நோக்கிய வடக்கு நெடுஞ்சாலையில் 178.5 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் காருடன் எருமை மாடுகள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மற்ற இரண்டு எருமை மாடுகள் காயமடைந்துள்ளன. எருமை மாடுகளுடன் மேலும் இரண்டு வாகனங்களும் மோதியுள்ளது.
விபத்துடன், காலை 7.30 மணி வரை பாதையை மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.