பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் – வெளியான ஆடியோ..!

0
39

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சி.சி.டி.வி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தலுடன் தொடர்புடைய வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தையின் சகோதரியின் மகனே இந்த சிறுமியை கடத்தியுள்ளார் என்றும், அவ்விருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான இணக்கத்தை இருவீட்டாரும் முதலில் தெரிவித்துள்ளனர். எனினும், சிறுமியின் தந்தை பின்னர் விருப்பமின்மையை தெரிவித்துள்ளார். இதனால், முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று ​அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 19 வயதான மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாயை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், பின்னர் அவர் அதை 3 மில்லியனாகக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வாகனத்தை கோரி, 200,000 ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை ரூ.50,000-ஐ சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படத்தில் காணப்படும் இவரை பற்றி தெரிந்தால் (பெயர் நசீர்)- பொலன்னறுவை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் தரவும் (இவர் பொலன்னறுவையில் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன)- 0718591233

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here