கண்டி கெலிஓயா தவுலகலைப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பரவியுள்ளது.
இச்செய்தி தொடர்பில் ஒன்றுக் கொன்று முரணான தகவல்கள் வெளிவந்தன.
19 வயதான மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாயை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் தெரிவித்து இருந்தனர். இருப்பினும், பின்னர் அவர் அதை 3 மில்லியனாகக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடத்திய இளைஞன் குறித்த மாணவிக்கு மச்சான் முறை என்றும் கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
குறித்த மாணவியை கடத்தி செல்லும் போது அவளை காப்பாற்ற ஒரு இளைஞன் போராடினான், குறித்த CCTV காட்ச்சியில் அது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறான இளைஞர்கள் பாராட்டப் படல் வேண்டும் தனது உயிரையும் துச்சமாக மதித்து திரைப்பட பாணியில் வேனில் தொங்கிச் சென்ற அந்த இளைஞன் வேனில் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்படுகிறார்.
குறித்த இளைஞன் சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தான், அவன் பின்வருமாறு கூறி இருந்தான்… வீடியோ இணைக்கப்படுள்ளது.