கொரதொட்ட, வெலிஹின்ன பகுதியில் சுமார் 4 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், ஐஸ் போதைப்பொருளுக்கு மேலதிகமாக சுமார் 500 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றன.