இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. முதல் கட்டமாக 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. 33 இஸ்ரேல் பிணை கைதிகள் இதன் மூலம் ரிலீஸ் செய்யப்பட உள்ளனர். மொத்தமாக 96 பேர் ஹமாஸ் மூலம் இஸ்ரேலில் பிடிக்கப்பட்டனர். இதில் 34 பேர் பலியாகிவிட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் 33 பேர் வரை முதல் கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்.
அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது இஸ்ரேலில் இருந்து கைப்பற்றப்பட்ட 94 பணயக்கைதிகளை ஹமாஸ் மற்றும் அவர்களின் இணை அமைப்புகள் இன்னும் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று இஸ்ரேலிய அரசாங்கம் நம்புகிறது, அவர்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர். இதில்தான் 33 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வரும் திங்கட்கிழமை பதவியேற்பதற்கு முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய கிழக்கில் மிகப்பெரிய நரகத்தையே கொண்டு வர நான் தயார்.. இதற்கான காலக்கெடு தொடங்கி உள்ளது. அதற்குள் ஹமாஸ் அமெரிக்காவிற்கு அடிபணிய வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.