அக்கரைப்பற்று மீராவோடையில் சிறுவன் ஒருவன் குளத்தில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரைப்பற்று மீராவோடை குளத்தில், அக்கரைப்பற்று TD/5 மன்சூர் சியானா ஆகியோரின் பேரக் குழந்தையே எவ்வாறு வீழ்ந்து மரணமாகியுள்ளது.
தற்போது உடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் இன்று (15) புதன்கிழமை நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.