மின்னேரியா பொலிஸ் பிரிவின் ஹபரணை – பொலன்னறுவை வீதியில் மின்னேரியா இராணுவ முகாமுக்கு அருகில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபரணையிலிருந்து மின்னேரியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் இருந்து வந்த இராணுவ வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து ஹிங்குரக்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தியபெதும பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.