கண்டியின் பன்னில பகுதியில் இன்று பிற்பகல் (19) கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். உயிரிழந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கூறப்படுகின்றது.
கடும் மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டத்தையடுத்து குறித்த கார் நீரில் மூழ்கி அதிலிருந்த இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில், பன்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடை மழை நிலவுவதால் வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் செல்வது நல்லது.