பெற்றோரின் கவனயீனத்தால் பறிபோன குழந்தையின் உயிர்.!

0
6

19 மாத குழந்தை ஒன்று வீட்டிற்கு முன் உள்ள மீன் வளர்க்கும் தண்ணீர் தேக்கத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாத்துவ – தல்பிட்டிய பகுதியில் வசிக்கும் ஒரு குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தாயும் தந்தையும் வீட்டில் இருந்த தருணத்தில், வீட்டின் முன் திறந்த வெளியில் மீன் வளர்க்கும் தண்ணீர் தேக்கத்தின் அருகே குழந்தை இருந்துள்ளதாகவும், சிறிது நேரத்தின் பின் குழந்தையை காணவில்லை என தேடியபோதே குழந்தை நீரில் வீழ்ந்துள்ளமை தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here