யாழில் பிறந்து ஒரு நாட்களேயான சிசுவின் சடலம்.!

0
288

யாழ்ப்பாணம் – கைதடி, தென்கிழக்கு மோக்கியவத்தை தோட்டக் கிணற்றில் இருந்து சிசு ஒன்றின் சடலம் இன்று (21) காலை மீட்கப்பட்டது.

பிறந்து ஒரு நாட்களேயான சிசுவின் உடல் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குழந்தையை பிரசவித்துவிட்டு தாய் ஒருவர் கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை 9.30 மணியளவில், விவசாயிகள், சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.