வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19) வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் எனும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
சேனபுர பகுதியில் திருமணம் முடித்துள்ள வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய றிஸ்வான் எனும் நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் அந்நபர் செல்லும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கரப்பொல – முத்துக்கல் வழியாக சேனபுர பகுதிக்கு செல்லும் போது மூவரும் வெள்ளநீரில் அகப்பட்டுள்ளனர்.
அதில், இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி மற்றும் மற்றைய நபர் மரக்கிளை ஒன்றினைப் பிடித்து உயிர் தப்பியுள்ளனர்.
மரணமடைந்த நபரின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.