கம்பளை – கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கம்பளை, கிராஉல்ல பகுதியைச் சேர்ந்த மதுர கீர்த்தி குணசேகர (வயது-58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேசன் வேலை, மின்சார தொழில் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அவர், கெலிஓயா பகுதிக்கு கிராம கோவிலுக்கு புதன்கிழமை (22) அன்னதானம் செய்து விட்டு பின்னர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தெல்கொட பகுதியிலிருந்து கம்பளை நோக்கி வந்த இந்த கார், வீதியை விட்டு விலகி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதி அருகில் வியாபார நிலைய கட்டிடத்தின் ஓரத்தில் மோதியுள்ளது.
கார் ஓட்டுநரின் நித்திரை கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தவுலகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.