கொழும்பு-10,மருதானை பொலிஸ் நிலைய சிறை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளார்.
மருதானை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறை கூண்டில் இந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார்.
எனினும், புதன்கிழமை (22) அதிகாலை, 4 மணியளவில் பொலிஸ் நிலைய சிறை கூண்டில் இருந்து அப்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பெண், தான் அணிந்திருந்த ஆடையை கிழித்து, தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.