மேஷம்:
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.
ரிஷபம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவு களால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.மாலையில் பணியாளர் களால் பிரச்னை ஏற்படும்.
மிதுனம்:
மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
கடகம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.
சிம்மம்:
உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.
கன்னி:
பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும்.
துலாம்:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்:
இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு:
தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.
மகரம்:
இன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
கும்பம்:
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். எதிரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.
மீனம்:
இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் சில விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.