கொழும்பு – பதுளை பிரதான வீதியில் விபத்து.. Video

0
67

கொழும்பிலிருந்து பதுளை பிரதான வீதியில் தெமோதர சந்தியில் இன்று (23) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி குறித்த வீதியில் மறுபக்கம் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும், தற்காலிக கடை என்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் நிகழும் வேளையில் லொரி உள்ளே மூன்று நபர்கள் இருந்திருந்துள்ளனர் என்றும் சாரதிக்கு மட்டும் சிறு காயங்களுடன் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் விபத்து நேர்ந்துள்ள நிலையில் வீதியை வளமைக்கு கொண்டு வருவதற்கு எல்ல போலீசார் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன் வீதி தற்பொழுது ஒரு வழிப்பாதையாகப்பட்டு வளமைக்கு திரும்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here