அமெரிக்க குடியுரிமை விவகாரம்… ட்ரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை.!

0
27

அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்ட டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து பணி நிமித்தமாக அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். குறிப்பாக சட்டவிரோதமாக குடியுரிமை பெறுவதை தடுப்பது மற்றும் ஏற்கனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதாகும்.

அதன்படி அமெரிக்காவில் பிறப்பால் ஒரு குழந்தை அமெரிக்க குடிமகனாக மாறும் நடைமுறை மாற்றப்படும் என ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்லார். அதன்படி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை இருவரும் அமெரிக்க குடிமகன்களாகவோ அல்லது அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறியவர்களாகவோ இருக்க வேண்டும். அப்படி யாரேனும் ஒருவர் சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் குடிபுகுந்து இருந்தால் அந்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது என்பதே.

பிறப்பால் குடியுரிமை என்ற அமெரிக்க சட்டதிருத்தத்தில் மாற்றம் கொண்டு வரும் டிரம்பின் இந்த உத்தரவு பிப்ரவரி 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கர்ப்பிணிகள் பலர் தங்களுக்கு பிரசவ தேதி பிப்ரவரி 19க்கு பிறகு கூறப்பட்டிருந்தாலும் பிப்ரவரி 19க்கு முன்னரே தங்கள் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க மருத்துவமனைகளை நாடத் தொடங்கியுள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

டிரம்பின் இந்த முடிவு அமெரிக்க குடியுரிமை சட்டத்திற்கு எதிரானது என வாஷிங்டன், அரிசோனா, இல்லினாய்ஸ் மற்றும் ஓரிகான் ஜனநாயக கட்சி மாகாணங்கள் சியாட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோஹெனூர் இந்த உத்தரவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக அதிருப்தி தெரிவித்தார்.

இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்று ஆளும் அரசு உறுப்பினர் எவ்வாறு சந்தேகத்திற்கு இடமின்றி கூற முடியும் என்பதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். இது போன்ற ஒரு வழக்கை நான் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. இது அப்பட்டமான அரசியலமைப்புக்கு எதிரான உத்தரவு” எனக் கூறியுள்ளார்.

இதற்கு விளக்கம் கேட்டு வழக்கை 14 நாட்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு பிப்ரவரி 6 விசாரணைக்கு வரும் வரையில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்த இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here