திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், பஸ்ஸில் பயணித்த 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வேனே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேனை ஓட்டி சென்ற கிண்ணியா பகுதியை சேர்ந்த ரிஹாஸ் என்னும் இளைஞரும், பஸ்ஸில் பயணித்த மேலும் ஒருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் மற்றும் வேனில் பயணித்த சுமார் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.