77 வது தேசிய சுதந்திர தின விழா ஆரம்பமானது.. 🛑Live

0
79

77 வது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்பதே இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் கருப்பொருளாகும்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை குறைந்த செலவில், அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக முப்படை வீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அணிவகுப்புக்கு முப்படை கவச வாகனங்களைப் பயன்படுத்தாமலிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

”நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகின்றோம். இலங்கையின் வரலாற்றை தற்போது மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் பிரவேசித்துள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் தற்போது ஒன்றாகப் போராடுகின்றோம்.

எமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தின விழாவின் நேரடி ஒளிபரப்பு கீழே..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here