இன்று (05) மாதம்பே பகுதியில் லொறியை முந்திச் செல்ல முயன்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியும் ஒரு பயணியும் படுகாயமடைந்து சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து அரச பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.
கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டுநரை துரத்திச் சென்று தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. (accident1st)