பாராளுமன்றில் வன்னி எம்.பி ரவிகரன் கூறியது.. வீடியோ

0
55

வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிர்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அபகரித்து இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே உள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி.யான துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் அதிகளவு தெங்குப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பளையும், அக்காணிகளின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட ரவிகரன் எம்.பி. குறித்த காணிகள் இராணுவத்தின் பிடியிலிருந்து உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேங்காய் ஏற்றுமதிசெய்வதற்கு இடையூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கில் மக்களுக்குச்சொந்தமான காணிகளை படையினர் இன்னமும் விடுவிப்புச் செய்யப்படவில்லை. புதிய ஆட்சியின்பின்னர் வடக்கு, கிழக்கில் ஒருசில இராணுவமுகாம்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதிலும் இன்றளவில் பலநூற்றுக்கணக்கான ஏக்கர்நிலங்கள், மக்களின் வாழ்வாதார நிலங்கள் படையினரின் வசமே உள்ளன.

மற்றும் கடந்த காலங்களில் இந்தநாட்டில் ஊடகத்துறையின் மீது மேற்கொள்ப்பட்ட அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு முறையான நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டுமெனவும், அதேவேளை ஊடகத்துறையின் சுதந்திரமும், சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here