நெல் கொள்வனவுக்காக அரச களஞ்சியசாலைகள் திறப்பு… நெல்லுக்கான நிர்ணய விலைகள்..!

0
67

நெல் கொள்வனவை முன்னிட்டு இன்று (06) முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அறுவடை இடம்பெறும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டார்.

நெல் கொள்வனவிற்காக திறைசேரியில் இருந்து 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லுக்கான நிர்ணய விலைகள் நேற்று (05) அறிவிக்கப்பட்டன.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல் 120 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 125 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 132 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here