இலங்கையில் தற்போது குழாய் நீரில் அதிக அளவு குரோமியம் உள்ளது, எனவே, குழாய் நீரை குடிக்கும்போது கவனமாக இருங்கள், என்று பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஒருவர் அதிக குரோமியம் உள்ளடங்கிய ஹைட்ரோலிக் சுண்ணாம்பு இறக்குமதி செய்வதன் மூலம் பெரும் தொகை நிதியை சம்பாதித்துள்ளார்.
இலங்கைக்கு சுமார் 550 மெட்ரிக் டன் ஹைட்ரோலிக் சுண்ணாம்பு வந்துள்ளதாகவும், இவை காலி, அம்பதலே மற்றும் ரத்மலானை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் டி.வி. சானக குறிப்பிட்டார்.
குழாய் நீரை சுத்திகரிப்பதற்காக ஹைட்ரோலிக் சுண்ணாம்பு பயன்படுத்துகின்றன.
இலங்கையில் தற்போது குழாய் நீரில் அதிக அளவு குரோமியம் உள்ளது, இது புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும்.
எனவே, குழாய் நீரை குடிக்கும்போது கவனமாக இருங்கள்,” என்று பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கூறினார்.