மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகாமையில் சற்று முன் விபத்துச்சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிரதான வீதியூடாக ஓட்டமாவடியிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த முச்சக்கர வண்டியும் கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கிப்பயணித்த காருமே குருக்கள்மடத்தில் வைத்து நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்திருக்கின்றது.
விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்துள்ளதுடன், அருகிலிருந்தவர்களால் தீ அணைக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முச்சக்கர வண்டியில் நாவலடி, 20 வீட்டுத்திட்டத்தைச்சேர்ந்த அப்துல் கபூர் என்பவரும் அவரது குடும்பத்தினரும் பயணித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.