கஹவத்தை மற்றும் முந்தல் பகுதிகளில் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கஹவத்தை, வெலேகேபொல பகுதியில் உள்ள கல்பில்ல அமுன பகுதியில் உள்ள அணையில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொடகவெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, முந்தல் கருங்காலிச்சோலை குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் முந்தலம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றும் மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.