காத்தான்குடி கடலில் நேற்று சனிக்கிழமை (08) மாலை நீராடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் சற்றுமுன் சடலமாக மீட்கப்படுள்ளார்.
காத்தான்குடி நதியா கடற்கரையில் 5 மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு மாணவன் கடலில் மூழ்கியுள்ளதுடன் ஏனைய நான்கு மாணவர்களும் தப்பியுள்ளனர்.
காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தை முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய முகம்மது ரமீஸ் முகம்மது சனாகி எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காத்தான்குடி நூறானியா வித்தியாலயத்தில் தரம் 11ல் இந்த மாணவர் கல்வி கற்று வரும் நிலையில் சக மாணவர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்ற நிலையில் குறித்த மாணவனை தேடும் பணி மிகவும் சிரமமாக இடம் பெற்று வந்த நிலையில் சற்றுமுன் பூநொச்சிமுனையில் சடலமாக மீட்கப்படுள்ளார்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.