வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (10) காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்திருந்தார்.
பின்னர் மனுவொன்றை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுமாறு தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, அந்த பிடியாணையை திரும்பப் பெற நீதிபதி உத்தரவிட்டார்.