துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது.!

0
87

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில், சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை, கல்கிஸ்ஸ பொலிஸை சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனது சேவை துப்பாக்கியுடன் காணாமல் போன சம்பவம் பதிவாகியிருந்தது.

முதற்கட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் டுபாய்க்கு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வரும் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு, குறித்த கான்ஸ்டபிளின் பெற்றோரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here