நான்கு மாதங்களில் 17 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்..!

0
100

ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை உட்கொண்டதற்காக கடந்த நான்கு மாதங்களில் 17 அதிகாரிகளை இலங்கை பொலிஸ் பணிநீக்கம் செய்துள்ளது.

இலங்கை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் பட்டியலை புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தொகுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த அதிகாரிகள் பரிசோதிக்கப்பட்டு மருத்துவ அறிக்கைகள் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகளைத் தொடர்ந்து, அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்திலிருந்து படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் நடந்து வருவதாகவும், அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்க உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here