4 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 4 வலம்புரிச் சங்குகளுடன் மூன்று பேர் கைது.!

0
117

திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் குறித்த வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்கு முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

வவுனியா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், இறக்கக் கண்டி பகுதியைச் சேர்ந்த வயது 33 மற்றும் 39 வயதுடைய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சங்குகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மூவரும் எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here