பதுளை பசறை பிரதான வீதியில் 4ஆம் கட்டை பகுதியில் இன்று புதன்கிழமை காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உட்பட மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் பதுளையில் இருந்து புத்தளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது பதுளை பசறை வீதியில் 4ஆம் கட்டை பகுதியில் 500 அடி பள்ளத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை அயலவர்கள் உடனடியாக மீட்டு பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் இது வரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.