பதுளை – பண்டாரவளை வீதியில் விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு.!

0
119

பதுளை – பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லொறி மோதியதில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியதால், கம்பம் சரிந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதியான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தெமோதர மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here