எல்ல நானுஓயா ஓ.டி.சி. ரயிலில் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ஓ.டி.சி. ரயிலில் ஹாலிஎலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளார்.
நேற்று (12) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.