முல்லைத்தீவு – முள்ளியவளை – முறிப்பு பகுதியில் ஒரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
முல்லைத்தீவு – முள்ளியவளை – முறிப்பு பகுதியில் குழுவினர் இணைந்து ஒருவருடன் வாய்த்தர்க்கதில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 36 வயது மதிக்கத்தக்க முறிப்பு பகுதியில் வசிக்கும் நபரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.