கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கழிப்பறைக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நபர் நேற்று (14) இரவு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து வந்தவர் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அவர் பல நாட்களாக கதிர்காமம் நகரத்தில் சுற்றித் திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர