சிறிது காலமாக இடம்பெற்று வந்த தகராறு காரணமாக, கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர் களுத்துறை, நாகொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் நேற்று (15) இரவு களுத்துறையின் கொஹோலன பகுதியில் கைகால்களில் வெட்டுக்காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில், அவரை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின்அதிகாரிகள் மற்றும் தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.