வீட்டை விட்டுச்சென்ற 3 பிள்ளைகளின் தாய் – உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு.!

0
73

3 பிள்ளைகளின் தாய் 7 நாட்கள் சென்றும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை (10) முதல் காணாமல் சென்றுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த காணாமல் சென்ற பெண்ணை மூதூர் பகுதியை சேர்ந்த நபரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அன்றைய தினம் குறித்த நபரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயாரான இப்பெண் இன்னும் வீடு வரவில்லை என்பதடன் இப்பெண் தொடர்பில் ஏதாவது அறிந்திருந்தால் உடனடியாக கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்க்கு தெரியப்படுத்துமாறு 0767824592, 0753251281 கேட்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்ணை அழைத்து சென்ற நபர் கல்முனை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்பவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here