நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை… ஜனாதிபதி அதிரடி

0
71

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படாது என்று அவர் மேலும் கூறினார்.

அரசுக்குச் சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏலம் விடப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொருளாதார திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

தரிசாக மாறிய பல நிலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here