தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலகம்; அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு.!

0
39

யாழ் பொது நூலகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காக நூலகங்களுக்கு தீ வைக்கப்பட்ட காலம் வரலாற்றில் உண்டு. யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கும் அதுதான் நடந்தது.

யாழ். நூலகம், யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.

யாழ். நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய். ஏனைய பிரதேசங்களில் நூலகங்களை அபிவிருத்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here