2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உயர்ந்த வட்டி வீதத்துக்காக 15 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்தைப் பெறுமதியை விட மூன்று சதவீதம் அதிகமான நிலையான வைப்பு வட்டி வீதத்தை சிரேஷ்ட பிரைகள் பெறுவர் என தனது வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையான வைப்பின் அதிகபட்ச எண்ணிக்கை ஒரு மில்லியன் ரூபாய்களாகும்.