கள்ளக்காதலில் மூழ்கிய கணவன்.. மனைவி செய்த சம்பவம்..!

0
120

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வந்தவர் அன்பரசன் (42). இவர் அப்பகுதியில் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி (38) என்ற மனைவி உள்ளார்.

திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு மாரிச்செல்வன்(12), நேச மணிகண்டன்(9) என்ற இரு மகன்கள் உள்ளனர். அன்பரசன் ஏற்கனவே திருப்புவனத்தில் உள்ள அய்யனார் பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக வேலையை விட்டு சொந்த ஊரில் தச்சு வேலை செய்து வந்துள்ளார்.

அன்பரசன் பேக்கரியில் வேலை பார்த்த போது அப்பகுதியில் உள்ள சத்யா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்தத் தொடர்பு குறித்து மனைவி கலைவாணிக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கணவன்- மனைவி இருவருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த கலைவாணி கணவன் அன்பரசனின் தலையில் குலவிக்கல்லை போட்டு கொலை செய்தார். இதில் அன்பரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் அன்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் கலைவாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தொடர்பால் கணவனை கொடூரமாக மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here