மல்லாவியில் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.! Video

0
129

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (17) மாலை 3 மாணவிகளுடன் இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மாணவிகள் குறித்த விடயத்தை வெளியே கூறியதன் பின்னர், அங்கிருந்தவர்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் முரண்பட்டடுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் இருந்தார் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், பொலிஸ் தரப்பு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும் பெற்றோர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here