மித்தெனிய கொலை தொடர்பாக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இன்று (21) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் (18) அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு வயது மகள், 9 வயது மகன் மற்றும் தந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.