துப்பாக்கி இயங்காததால் உயிர் பிழைத்த கடை முதலாளி – நீர்க்கொழும்பில் சம்பவம்.. Video

0
75

நீர்கொழும்பு பகுதியில் இன்று (21) பிற்பகல் மற்றொரு துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியடைந்துள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மிரிஸ் அந்தோணி என்கிற சமிந்தவின் மூத்த மகனை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்படவிருந்தது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போது துப்பாக்கி இயங்காததால் தப்பிச் சென்றுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் சீடரான கமாண்டோ சாலிந்த என்ற நபர், குறித்த கடையில் கப்பம் கேட்டதாகவும், பணம் கொடுக்காததால் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here