பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் காணாமல் போன பெண்ணின் தாயும் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இஷாரா செவ்வந்தியின் தாயாரும் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 முதல் 48 வயதுக்குட்பட்ட இருவர்களிடமும் நீண்ட நேரம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.