புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது…
புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிய வேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் கணவர், மனைவி, 6 மாத குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
பயணித்துக் கொண்டிருந்த வேளை குரங்கு ஒன்று குறுக்கே மோதியதில் தனது குழந்தையை காப்பற்றிய தாய்க்கு தலையில் அடிபட்டதனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்ட்தால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.