பாணந்துறையில் உள்ள வீட்டில் இருந்து 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கையடக்கத் தொலைபேசிகள் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தனது மகனுடன் வீட்டில் வசித்து வருவதாகவும், சோதனையின் போது அவர் வீட்டில் இல்லாததால், அவர் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.