நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; சபையில் கேள்வியெழுப்பிய சஜித்..!

0
5

நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

நாட்டில் புதிய ஆண்டின் இரண்டு மாதங்களில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளின் வளர்ந்து வரும் செல்வாக்கு பொதுமக்களின் அச்சங்களை அதிகரித்துள்ளது.

மேலும், நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்வதுடன் சில கொலைகள் குற்றவியல் ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகளாக இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

வன்முறை குற்றங்களுக்கு எதிராக உரிய நடைமுறைகள் குறித்து அரசாங்கம் உறுதியளித்த போதிலும், காவலில் உள்ள சந்தேக நபர்களைக் கையாள்வதற்கான பொலிஸாரின் நெறிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பொலிஸாரின் சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், குற்றவியல் வலையமைப்புகளின் அதிகரிப்பு குறித்த அதிகாரிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பொலிஸ் தலைவர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையே ஏற்படக்கூடிய மோதலை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here