அனுராதபுரம் பொலிஸ் நிலைய தங்குமிட விடுதியில் இன்று (27) பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நித்திரையின் போது உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிஸ் உணவகத்தின் பாதுகாவலராகப் பணியாற்றிய 57 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று நடத்தப்பட உள்ளதுடன், சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.