பொலன்னறுவை, எலஹர, நிக்கபிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது.
எலஹர, நிக்கபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆசிரியை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஆசிரியை பாடசாலைக்குச் செல்வதற்காக உணவுகளைத் தயாரிப்பதற்குப் பாத்திரங்களைக் கழுவுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த ஆசிரியை பக்கமுன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.